ஈரோடு மாவட்டத்தில் மானிய விலையில், வேளாண் எந்திரங்கள் பெற ரூ.40¾ லட்சம் ஒதுக்கீடு

ஈரோடு மாவட்டத்தில் மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் பெற ரூ.40¾ லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் மானிய விலையில், வேளாண் எந்திரங்கள் பெற ரூ.40¾ லட்சம் ஒதுக்கீடு
Published on

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் பெற ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

வேளாண் எந்திரங்கள்

ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-

வேளாண்மை எந்திரமயமாக்கும் திட்டத்தின் கீழ் நடப்பு நிதி ஆண்டில் ஈரோடு மாவட்டத்தில் தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்து, மத்திய அரசின் www.agrimachinery.nic.in என்ற இணையதளத்தின் மூலம் டி.பி.டி. வழி முறைகளின் படி மானியம் பெறலாம்.

ஈரோடு மாவட்டத்திற்கு இந்த திட்டத்தின் கீழ் தனிப்பட்ட விவசாயிகள் வேளாண் எந்திரங்களை மானியத்தில் பெற்றிட ஏதுவாக ரூ.40 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் 50 எந்திரங்கள் மற்றும் கருவிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.

இணையதளம்

2020-2021-ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நடப்பு ஆண்டில் ஏற்று கொள்ளப்படமாட்டாது. எனவே இந்த ஆண்டிற்கு விண்ணப்பங்கள் உழவன் செயலியில் பதிவு செய்து தொடர்ந்து மத்திய அரசின் www.agrimachinery.nic.in என்ற இணையதளம் மூலமாக புதிதாக பதிவு செய்யப்பட வேண்டும். மேலும் விவசாயிகள் தங்களுக்கு தேவைப்படும் கருவிகள் மற்றும் உபகரணங்களை தேர்வு செய்து பயன் பெறலாம்.

ஒரு நிதி ஆண்டில் தனக்கு தேவைப்படும் ஏதாவது 2 வேளாண் எந்திரங்கள் அல்லது கருவிகளை மட்டுமே மானிய விலையில் வாங்கிட இயலும். மேலும் அடுத்த 10 ஆண்டுகளுக்கு பின்னர் தான் அதே வகையான வேளாண் எந்திரங்கள், கருவிகளை மானிய விலையில் வாங்க முடியும். மேலும் விவரங்களுக்கு 0424-2270067 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com