மதுபோதையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர், மதுபோதையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மதுபோதையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் மணவாளநகர் செங்கல்வராயன் தெருவை சேர்ந்தவர் காமராஜ். இவரது மகன் ராஜூ (வயது 26). மதுப் பழக்கம் கொண்ட ராஜூ நேற்று முன்தினம் இரவு அதிக அளவு மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்ததும், தனது அறைக்கு தூங்கச் சென்றார். நேற்று காலை வெகுநேரமாகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த வீட்டிலுள்ளவர்கள் ஜன்னல் வழியாக பார்த்தனர். அப்போது ராஜூ மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து மணவாள நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com