சாராய வியாபாரி, தடுப்புக்காவல் சட்டத்தில் கைது

உளுந்தூர்பேட்டை அருகே தடுப்புக்காவல் சட்டத்தில் சாராய வியாபாரி கைது செய்யப்பட்டார்.
சாராய வியாபாரி, தடுப்புக்காவல் சட்டத்தில் கைது
Published on

விழுப்புரம்,

உளுந்தூர்பேட்டை அருகே அருங்குகை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் அய்யனார்(வயது 25). இவர் மீது உளுந்தூர்பேட்டை பகுதிகளில் சாராயம் கடத்தியதாகவும், விற்பனை செய்ததாகவும் பல்வேறு வழக்குகள் உள்ளன.

கடந்த சில வாரத்திற்கு முன்பு சாராய வழக்கில் அய்யனாரை உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். அதைத்தொடர்ந்து, ஜாமீனில் வெளியே வந்த இவர் மீண்டும் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்ததால் இவருடைய செயல்களை தடுக்கும்பொருட்டு தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார்.

அதன்பேரில் அய்யனாரை தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவிட்டார். இதையடுத்து அய்யனாரை தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com