பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் இன்று அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் இன்று அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்.
பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் இன்று அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்
Published on

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் தாலுகாவில் சிறுவாச்சூர், வேப்பந்தட்டை தாலுகாவில் வெங்கலம் (கிழக்கு), குன்னம் தாலுகாவில் கிழுமத்தூர் (தெற்கு), ஆலத்தூர் தாலுகாவில் தேனூர் ஆகிய கிராமங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் நடைபெறவுள்ளது. இதே போல் அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் தாலுகாவில் கயர்லாபாத், கருப்பிலாக்கட்டளை, உடையார்பாளையம் தாலுகாவில் உடையவர்தீயனூர், உதயநத்தம் (கிழக்கு), செந்துறை தாலுகாவில் நமங்குணம், ஆண்டிமடம் தாலுகாவில் வரதராஜன்பேட்டை ஆகிய கிராமங்களில் இன்று அம்மா திட்ட முகாம் நடக்கிறது. இந்த முகாமில் வருவாய்த்துறையின் சமூகப்பாதுகாப்புத் திட்டங்கள், இலவச வீட்டுமனை பட்டாக்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றில் தகுதி பெற்ற மனுக்களின் மீது உடனடியாக தீர்வு வழங்கப்படும். எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர்கள் சாந்தா (பெரம்பலூர்), ரத்னா (அரியலூர்) ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com