பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
கரூர்
கரூர்
Published on

வேலாயுதம்பாளையம்,

சர்வ ஏகாதசியையொட்டி தோட்டக்குறிச்சி சேங்கல்மலை வரதராஜ பெருமாளுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர், துளசியால் அலங்காரம் செய்யப்பட்டு மாலைகள் அணிவிக்கப்பட்டது. பின்னர் தீபாராதனை காட்டப்பட்டது. தாடர்ந்து சுவாமியை பல்லக்கில் அமர வைத்து கோவிலை சுற்றி வலம் வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் இறுதியாக. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.

X

Daily Thanthi
www.dailythanthi.com