மூதாட்டியிடம் நகை பறித்த மேலும் ஒருவர் கைது

திசையன்விளை அருகே மூதாட்டியிடம் நகை பறித்த மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
மூதாட்டியிடம் நகை பறித்த மேலும் ஒருவர் கைது
Published on

திசையன்விளை:

திசையன்விளை அருகே மன்னார்புரத்தைச் சேர்ந்த ரெஜிஸ் மேரி (வயது 77) கடந்த 10-ந்தேதி சாலையோரம் நடந்து சென்றபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள், அவர் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றனர். இதுகுறித்து திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக திசையன்விளை அருகே வடக்கு கும்பிளம்பாட்டைச் சேர்ந்த செல்லத்துரை மகன் அரிச்சந்திர மகராஜா என்ற பாம்பே ராஜாவை (வயது 27) போலீசார் கைது செய்து நகையை மீட்டனர். மேலும் தலைமறைவாக இருந்த வடக்கு கும்பிளம்பாட்டைச் சேர்ந்த கருப்பசாமி மகன் நல்லத்துரையை (26) போலீசார் நேற்று கைது செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com