முன்விரோதம் காரணமாக வாலிபருக்கு அரிவாள் வெட்டு

முன்விரோதம் காரணமாக வாலிபரை அரிவாளால் வெட்டிய மற்றொரு வாலிபர் கைது செய்யப்பட்டார். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
முன்விரோதம் காரணமாக வாலிபருக்கு அரிவாள் வெட்டு
Published on

பூந்தமல்லி,

சென்னை அமைந்தகரை, ஈஸ்ட் கிளப் ரோடு பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் ராஜா(வயது 26). நேற்று முன்தினம் இரவு இவர், தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 3 பேர், திடீரென விக்னேஷ் ராஜாவை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்று விட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த விக்னேஷ் ராஜாவை, அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த அரிஷ் (22) என்பவரை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த பகுதியில் நடந்த சாவு ஊர்வலத்தின்போது இவர்களுக்கும், விக்னேஷ் ராஜாவுக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது.

இந்த முன்விரோதம் காரணமாக அரிஷ், அவரது நண்பர்களான அனுப் மற்றும் விக்கி என்ற தினேஷ் ஆகிய 3 பேரும் சேர்ந்து விக்னேஷ் ராஜாவை அரிவாளால் வெட்டியது தெரிந்தது. தலைமறைவாக உள்ள அனுப், விக்கி இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com