மதுபான கடத்தல் புகாரை விசாரிக்க கண்காணிப்பு அலுவலர் நியமனம்

சிவகங்கை மாவட்டத்தில் மதுபான கடத்தல் புகாரை விசாரிக்க கண்காணிப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
மதுபான கடத்தல் புகாரை விசாரிக்க கண்காணிப்பு அலுவலர் நியமனம்
Published on

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் மதுபானம், சாராயம் கடத்துதல், விற்பனை செய்தல், மதுபானம் சில்லரை விற்பனை கடைகளில் அளவுக்கு அதிகமாக விற்பனையாகுதல், சட்டவிரோதமான மதுபானங்கள் விற்பனை தொடர்பான புகார்கள், மதுபானம் தொடர்பாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்களை கண்காணிக்க சிவகங்கை மாவட்டத்திற்கு கண்காணிப்பு அலுவலராக டாஸ்மாக் உதவி மேலாளர் வேலுமணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


X

logo
Daily Thanthi
www.dailythanthi.com