அரவக்குறிச்சியை சிறந்த முன்மாதிரி தொகுதியாக மாற்றி காட்டுவேன் பா.ஜ.க. வேட்பாளர் கே.அண்ணாமலை பேச்சு

அரவக்குறிச்சியை சிறந்த முன்மாதிரி தொகுதியாக மாற்றி காட்டுவேன் பா.ஜ.க. வேட்பாளர் கே.அண்ணாமலை தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அரவக்குறிச்சியை சிறந்த முன்மாதிரி தொகுதியாக மாற்றி காட்டுவேன் பா.ஜ.க. வேட்பாளர் கே.அண்ணாமலை பேச்சு
Published on

அரவக்குறிச்சி,

அரவக்குறிச்சி பேரூராட்சி பகுதியில் அ.தி.மு.க.கூட்டணி பா.ஜ.க. வேட்பாளர் கே.அண்ணாமலை தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் செல்லும் இடமெல்லாம் பெண்கள் திரளாக வந்து பூரண கும்ப மரியாதையுடன் ஆரத்தி எடுத்து, நெற்றியில் திலகம் இட்டனர். அப்போது பொதுமக்கள் முன்னிலையில் அவர் பேசியதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஆசியோடு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எனக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கி உள்ளார்.

இரட்டை இலையும் தாமரையும் ஒன்றுதான். நீங்கள் தாமரைக்கு செலுத்தும் ஒவ்வொரு வாக்கும் இரட்டை இலைக்கு செலுத்தும் வாக்காகும். அரவக்குறிச்சி தொகுதியை சிறந்த முன்மாதிரி தொகுதியாக மாற்றி காட்டுவேன். ஐ.பி.எஸ். பதவியை வேண்டாம் என்று கூறி உங்களுக்காக சேவை செய்ய வந்துள்ளேன். உங்களில் ஒருவனாக உங்களுடனே இருந்து உங்களின் வாழ்வாதாரம் மேம்பட பாடுபடுவேன். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து சாதித்து காட்டுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com