மோட்டார் சைக்கிள், செல்போன் பறித்த 5 பேர் கைது

வாலிபரை தாக்கி மோட்டார் சைக்கிள், செல்போன் பறித்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
மோட்டார் சைக்கிள், செல்போன் பறித்த 5 பேர் கைது
Published on: 

மதுரை,

மதுரை அவனியாபுரம் காவேரி காலனியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 25). சம்பவத்தன்று நள்ளிரவில் இவர் பெரியார் பஸ் நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை 5 பேர் கொண்ட கும்பல் கத்தி உள்ளிட்ட ஆயங்தங்களை காட்டி வழிமறித்தது. பின்னர் அந்த கும்பல் விக்னேசை தாக்கி அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை பறித்து கொண்டு தப்பி விட்டது. இதுகுறித்து அவர் திடீர்நகர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இதில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனே பிடிக்க போலீஸ் துணை கமிஷனர் தங்கத்துரை உத்தரவிட்டார். அதன் பேரில் திடீர்நகர் உதவி கமிஷனர் ரவீந்திரபிரகாஷ் தலைமயில் சப்-இன்ஸ்பெக்டர் மணிக்குமார் மற்றும் போலீ சார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதன் மூலம் மேலவாசலை சேர்ந்த திவான் என்ற சுப்பிரமணி (22), லோகஷே (19), மனோஜ் குமார் (19) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் மோட்டார் சைக்கிளை பறித்ததை ஒப்புக்கொண்டனர். பின்னர் போலீசார் அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்கள் தெரிவித்த முக்கிய நபரான நாகராஜை (23) போலீசார் தேடி வந்தனர். அப்போது அவர் போலீசார் என்னை கைது செய்தால் பிளேடால் கையை அறுத்து கொண்டு தற்கொலை செய்வேன். மேலும் நீதிபதியிடம் போலீசார் என்னை தாக்கினார்கள் என்று கூறுவேன் என்று மிரட்டல் விடுத்தார். ஆனாலும் போலீசார் அவர் இருக்கும் இடத்தை சுற்றி வளைத்து பிடிக்க முயன்ற போது நாகராஜ் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றார். அப்போது தவறி விழுந்ததால் அவர் கீழே விழுந்து அடிபட்டார். பின்னர் அவரை போலீசார் கைது செய்து ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com