கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது

கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது
Published on: 

மதுரை,

மதுரை முத்துப்பட்டி அய்யனார்புரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சூரஜ் (வயது 26). சம்பவத்தன்று இவர் அவர் வீட்டின் அருகே மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற ஜெய்ஹிந்த்புரம் பாரதியார் ரோட்டை சேர்ந்த தக்காளி சரவணன் (23), கோவலன் நகரை சேர்ந்த வீரகுமார் (24), ஜெய்ஹிந்த்புரம் விக்னேஷ் (22) உள்ளிட்ட 3 பேர் அவருடன் தகராறு செய்தனர். மேலும் அவர்கள் சூரஜை சரமாரியாக தாக்கி கத்தியை காண்பித்து கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து அவர் சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தக்காளி சரவணன், வீரகுமார், விக்னேஷ் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com