ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது

ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது
Published on

பேரையூர், ஏப்.28-

மதுரை மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார்கள் ரேஷன் அரிசி கடத்தல் சம்பந்தமாக, பேரையூர் சாலையில் வாகன சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினி வேன் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். வேனில் 45 மூடைகளில் 1800 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. உடனே வேன் மற்றும் ரேஷன் அரிசி மூடைகளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வேன் உரிமையாளர் மதுரை மேல அனுப்பானடியை சேர்ந்த முத்து (வயது 40), வேன் டிரைவர் மதுரை வளையங்குளத்தை சேர்ந்த அருணாச்சலம் ( 26) ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com