வாலிபர்கள் 5 பேர் கைது

கஞ்சா விற்ற வாலிபர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாலிபர்கள் 5 பேர் கைது
Published on: 

மதுரை,

மதுரை எஸ்.எஸ்.காலனி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது விராட்டிபத்து பகுதியில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்குள்ள தோப்பில் இருந்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அதில் மகபூப்பாளையத்தை சேர்ந்த வினோத்குமார் (வயது 24), ஷேக்முகமது (26), எஸ்.எஸ்.காலனி மாரிமுத்து (28), மாடக்குளம் லோகேஷ்வரதன் (19), வைத்தியநாதபுரம் முகமதுசமீர் (19) என்பதும், அவர்கள் கஞ்சா விற்றதும் தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர்கள் 5 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com