மதுவிற்ற 2 பேர் கைது

சாத்தூர் அருகே மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுவிற்ற 2 பேர் கைது
Published on

சாத்தூர்,

சாத்தூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செய்யது இப்ராஹீம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாத்தூர் கிருஷ்ணன் கோவில் அருகே வைத்து மதுபாட்டில் விற்ற சாத்தூரை சேர்ந்த போஸ் பாண்டியன் (வயது 52) என்பவரிடம் 28 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர். அதேபோல சாத்தூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தம்பித்துரை தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது நடுச்சூரங்குடியில் வீட்டின் அருகில் வைத்து மதுபாட்டில் விற்ற சுபாஷ்சுந்தர் (23) என்பவரிடம் இருந்து 7 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com