போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது

போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது
Published on

சுரண்டை:

சுரண்டை சிவகுருநாதபுரம் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் தெருவில் வசித்து வருபவர் மாரியப்பன் மகன் சார்லஸ் என்ற சாதிர் (வயது 47). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் ஒரு வீட்டிற்கு சென்று தூங்கிக் கொண்டிருந்த சிறுமியிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில், ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சார்லஸ் என்ற சாதிரை கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com