கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாடானையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டம்
Published on

தொண்டி,

திருவாடானையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் தாலுகா அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று மதிய உணவு இடைவேளையில் நடைபெற்றது. வட்டத்தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். இதில் கலந்துகொண்ட அரசு ஊழியர்கள் முடக்கப்பட்ட சரண் விடுப்பு ஒப்பளிப்பு, 3 சதவீத அகவிலைப்படி, பழைய ஓய்வூதியம் திட்டத்தை நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரிலே அறிவிக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்களை எழுப்பி ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை களை விளக்கி மாவட்ட துணைத் தலைவர் பவுல்ராஜ் சிறப்புரையாற்றினார். முடிவில் வட்டக்கிளை பொருளாளர் வினோத்குமார் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com