உதவி தலைமை ஆசிரியர் வீட்டில் 30 பவுன் நகைகள் கொள்ளை

மதுரையில் உதவி தலைமை ஆசிரியர் வீட்டில் 30 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
உதவி தலைமை ஆசிரியர் வீட்டில் 30 பவுன் நகைகள் கொள்ளை
Published on

மதுரை,

மதுரை ஆரப்பாளையம் கண்மாய்கரை, மலர்எழில் தெருவை சேர்ந்தவர் ஜேம்ஸ் ஸ்டீபன்(வயது 57). அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக உள்ளார். இவரது மனைவி அந்தோணியம்மாள், தனியார் பள்ளி ஆசிரியை. இவர்கள் நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிவிட்டு படுக்கை அறையில் தூங்கி விட்டனர். அந்த நேரத்தில் மர்ம நபர்கள் வீட்டின் ஜன்னலை திறந்து, அங்கிருந்த சாவியை எடுத்து கதவை திறந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 30 பவுன் நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி விட்டனர். காலையில் ஜேம்ஸ் ஸ்டீபன் எழுந்து கதவை திறந்தபோது, கதவு பூட்டியிருப்பது தெரியவந்தது. உடனே பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்து கதவை திறந்தனர்.

அப்போது தான் கொள்ளையர்கள் படுக்கை அறையை பூட்டி விட்டு நகையை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இது குறித்து கரிமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் அவரது வீட்டின் அருகே சோனியா என்பவர் வீட்டிலும் 2 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவான தடயங்களை சேகரித்தனர். இந்த கொள்ளை சம்பவங்கள் குறித்து கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com