கிராமத்தில் ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் ஒருவர் பலி 50 பேர் காயம்

புதுக்கோட்டை கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைமுட்டியதில் ஒருவர் பலியானார். 50 பேர் காயம் அடைந்தனர்.
கிராமத்தில் ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் ஒருவர் பலி 50 பேர் காயம்
Published on

திருமானூர்,

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதையொட்டி மாதா கோவில் வீதியில் வாடிவாசல் அமைக்கப்பட்டது. முதலில் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் 200-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடின. இதில் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த 300-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

ஒருவர் பலி

காளைகள் முட்டியதில் இருங்களுரை சேர்ந்த சேவியர் (வயது 55), அகழங்கநல்லூரை சேர்ந்த முத்தமிழ்செல்வன் (26), அன்னிமங்கலத்தை சேர்ந்த மணிகண்டன் (26), திருமழபாடியை சேர்ந்த செல்வகுமார் (42) உள்பட 50 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் திருச்சி மாவட்டம் விரகாலூரை சேர்ந்த ஜான்கென்னடி (42) படுகாயமடைந்தார். இதையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக திருமானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.

பரிசு பொருட்கள்

ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழாக்குழுவினரால் வெள்ளி நாணயங்கள், சில்வர் பாத்திரங்கள் போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

ஜல்லிக்கட்டு போட்டியை காண அரும்பாவூர், வேப்பந்தட்டை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு போட்டியை கண்டு களித்தனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் புதுக்கோட்டை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com