அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளுக்கு உணவு வழங்க ஏற்பாடு செவிலியரின் மனிதநேயத்துக்கு பாராட்டு

நோயாளிகளுக்கு அவர்களது உறவினர்கள் சாப்பாடு வழங்கி வருகின்றனர். இதனால் தொற்று பரவ அதிக வாய்ப்பு உள்ளது.
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளுக்கு உணவு வழங்க ஏற்பாடு செவிலியரின் மனிதநேயத்துக்கு பாராட்டு
Published on

புதுச்சேரி,

புதுச்சேரி இந்திராகாந்தி அரசு பொதுமருத்துவமனையில் 100-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதையடுத்து நோயாளிகளுக்கு அவர்களது உறவினர்கள் சாப்பாடு வழங்கி வருகின்றனர். இதனால் தொற்று பரவ அதிக வாய்ப்பு உள்ளது. இதையொட்டி மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் அனுராதா தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் ரூ.21 ஆயிரம் மதிப்பிலான மளிகை பொருட்களை வாங்கி அரசு மருத்துவமனை சமையல் கூடத்திற்கு வழங்கினார். அந்த மளிகை பொருட்களை கொண்டு உணவு தயாரிக்கப்பட்டு கொரோனா நோயாளிகளுக்கு கொடுக்கப்படுகிறது. செவிலியரின் இந்த மனிதநேயத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர். அவரது செயலை தொடர்ந்து அரசு பொது மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள் மற்றும் ஓய்வு பெற்ற அரசு டாக்டர்கள் சிலரும் நிதி வழங்க முன்வந்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com