கூத்தாநல்லூர் அருகே 2 பேருக்கு அரிவாள் வெட்டு விவசாயி கைது

2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது
கூத்தாநல்லூர் அருகே 2 பேருக்கு அரிவாள் வெட்டு விவசாயி கைது
Published on

கூத்தாநல்லூர்:-

கூத்தாநல்லூர் அருகே உள்ள வேளுக்குடி கோம்பூர் ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது37). விவசாயி. இவருக்கும், அதே தெருவை சேர்ந்த சகோதரர்கள் விவசாயி ஞானப்பிரகாசம் (44), இளங்கோ (35) ஆகியோருக்கும் இடையே நிலப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று நடந்த தகராறில் இரு தரப்பினரும் அரிவாள் மற்றும் உருட்டுக்கட்டையால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது நடந்த தாக்குதலில், சுரேஷ் மற்றும் இளங்கோவிற்கு தலையில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் திருவாரூரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கூத்தாநல்லூர் போலீசில் சுரேஷ் மற்றும் இளங்கோ தனித்தனியே புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஞானப்பிரகாசத்தை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com