

பொன்னேரி வள்ளலார் தெருவில் வசித்து வந்தவர் ரவி (வயது 55). ஆட்டோ டிரைவர். இவர் பைனான்ஸ் மூலம் கடன் பெற்று ஆட்டோ ஒன்று வாங்கி உள்ளார். இதற்கான பணத்தை சரியாக கட்டாததால் கடனில் சிக்கி உள்ளார்.
இதனால் மன உளைச்சலில் இருந்தவர் ஆட்டோவிற்காக வீட்டில் வைத்து இருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். சென்னை கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.