மத்திய அரசை கண்டித்து ஆட்டோ ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம் நாகையில் நடந்தது

மத்திய அரசை கண்டித்து நாகையில் ஆட்டோ ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசை கண்டித்து ஆட்டோ ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம் நாகையில் நடந்தது
Published on

நாகப்பட்டினம்,

ஆர்ப்பாட்டம்

நாகை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அவுரித்திடலில் நாகை மாவட்ட ஆட்டோ ஓட்டுனர் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில், 29.12.2016 முதல் உயர்த்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலக கட்டணத்தை வாபஸ் பெறக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஆட்டோ சங்க மாவட்ட துணை செயலாளர் கரிகாலன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் கவுதமன் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் 29.12.2016 முதல் உயர்த்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலக கட்டணத்தை உடனே வாபஸ் பெறக்கோரியும், மோட்டார் தொழிலை அழிக்க நினைக்கும் மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் சீனி.மணி, மாவட்ட தலைவர் ஜீவா, மாவட்ட துணைத்தலைவர் ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் முனியாண்டி, தொழிற்சங்க கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் சிவக்குமார், மாவட்ட துணை செயலாளர் நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் மகேந்திரன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com