தொழில் நஷ்டம் காரணமாக ஆட்டோமொபைல் கடை உரிமையாளர் தற்கொலை-உருக்கமான கடிதம் சிக்கியது

தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக ஆட்டோமொபைல் கடை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது.
தொழில் நஷ்டம் காரணமாக ஆட்டோமொபைல் கடை உரிமையாளர் தற்கொலை-உருக்கமான கடிதம் சிக்கியது
Published on: 

கருப்பூர்:

தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக ஆட்டோமொபைல் கடை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது.

தற்கொலை

சேலம் டால்மியா போர்டு பாரதி நகரை சேர்ந்தவர் விவேக் (வயது 37). சங்ககிரியில் ஆட்டோமொபைல் கடை நடத்தி வந்தார். இவருக்கு ரம்யா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இவருடைய தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக விவேக் மன வேதனையில் இருந்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கருப்பூர் போலீசார் அங்கு விரைந்து சென்று விவேக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை குறித்து விசாரித்தனர்.

உருக்கமான கடிதம் சிக்கியது

அப்போது விவேக் எழுதிய உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

எனது அன்பான மகன்களை விட்டு பிரிவதை நினைத்தால் வேதனையாக உள்ளது. எனது மனைவி ரம்யா தங்கமானவள், என்னை அன்போடு வழி நடத்தினார். என்னை மதித்து வந்த உனக்கு இப்படியொரு நிலையை உருவாக்கி விட்டேன். ரம்யாவுக்கு அரசு வேலை வாங்கி கொடுக்க வேண்டும். நான் எங்கேயும் கடன் வாங்கவில்லை.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

விவேக் தற்கொலை செய்தது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com