எரிபொருள் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு பேரணி

மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பெட்ரோலிய பொருள் சிக்கன ஆராய்ச்சி அமைப்பு (பி.சி.ஆர்.ஏ.) எரிபொருள் சிக்கனத்தின் அவசியம் குறித்து தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.
எரிபொருள் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு பேரணி
Published on

இந்த அமைப்பின் இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதும் 200 நகரங்களில் நேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன. அந்த வகையில் சென்னையில் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் (சி.பி.சி.எல்.) சார்பில் மணலியில் நேற்று சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை சி.பி.சி.எல். செயல்பாட்டு பிரிவு இயக்குனர் எஸ்.கிருஷ்ணன் உள்பட அதிகாரிகள் முன்னிலையில் அதன் மேலாண்மை இயக்குனர் அரவிந்த் குமார் தொடங்கி வைத்தார்.

இந்த பேரணியில் பத்மஸ்ரீ விருது பெற்ற இந்திய கூடைப்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பி.அனிதா, பூப்பந்து வீரர் வேலன், சின்னத்திரை பிரபலங்கள் சுஜிதா, காவ்யா, குமரன் மற்றும் இளைஞர்கள், தன்னார்வலர்கள் என 1,000 பேர் பங்கேற்றனர். மணலி சி.பி.சி.எல். பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து தொடங்கிய பேரணி 5 கி.மீ. தூரம் வரை நடைபெற்றது.

X

Daily Thanthi
www.dailythanthi.com