பொங்கலுக்கு விடுமுறைக்கு வந்த இடத்தில் பரிதாபம்: குளத்தில் மூழ்கி வாலிபர் பலி

பொங்கலுக்கு விடுமுறைக்கு வந்த இடத்தில் குளத்தில் மூழ்கி வாலிபர் பலியானார்.
பொங்கலுக்கு விடுமுறைக்கு வந்த இடத்தில் பரிதாபம்: குளத்தில் மூழ்கி வாலிபர் பலி
Published on

கல்லல்,

சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே பொய்யலூர் ஊராட்சி நேதாஜி நகரைச் சேர்ந்தவர் சண்முகநாதன். இவர் பெங்களூரில் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் சூர்யா (வயது 19). இவர் பிளஸ்-2 படித்து முடித்து விட்டு வேலை செய்து வந்தார்.

இவர் பொங்கல் விடுமுறையையொட்டி தனது நண்பர் பெங்களூருவை சேர்ந்த சுஜித் உடன் பெரியப்பா மகன் முத்துபாண்டி வீட்டிற்கு விருந்துக்கு வந்தார்.

இந்த நிலையில் நேற்று மதியம் 3 மணி அளவில் வீட்டுக்கு எதிரே உள்ள குளத்தில் சூர்யா குளிக்கச் சென்றார். அப்போது நீரில் மூழ்கி அவர் இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் கல்லல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அங்கு குளத்தில் மூழ்கி பலியான சூர்யா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து கல்லல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொங்கல் விடுமுறைக்கு வந்த இடத்தில் வாலிபர் குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com