பகுஜன் சமாஜ் கட்சி பிரமுகர் கொலையில் தமிழ்நாட்டில் பதுங்கிய 4 பேர் கைது

ராஜகோபால்நகர் அருகே கஸ்தூரிநகரில் சீனிவாஸ் ஆயுதங்களால் தாக்கி மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டார்.
பகுஜன் சமாஜ் கட்சி பிரமுகர் கொலையில் தமிழ்நாட்டில் பதுங்கிய 4 பேர் கைது
Published on

பெங்களூரு,

பெங்களூரு ராஜகோபால்நகர் அருகே வசித்து வந்தவர் சீனிவாஸ் என்ற சீனா(வயது 36). இவர், பகுஜன் சமாஜ் கட்சியின் பிரமுகர் ஆவார். மேலும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கும் நபராகவும் சீனிவாஸ் இருந்து வந்தார். இந்த நிலையில், கடந்த 9-ந் தேதி ராஜகோபால்நகர் அருகே கஸ்தூரிநகரில் சீனிவாஸ் ஆயுதங்களால் தாக்கி மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து ராஜகோபால்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கொலையாளிகளை வலைவீசி தேடிவந்தனர். மேலும் தனிப்படையும் அமைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், சீனிவாஸ் கொலை வழக்கு தொடர்பாக லக்கரேயை சேர்ந்த அபிஷேக்( வயது 23), ரகுவரன்(28), பிரவீன்(21), மனோஜ்குமார்(28) ஆகிய 4 பேரையும் ராஜகோபால்நகர் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் 4 பேரும் தமிழ்நாட்டில் பதுங்கி இருப்பது பற்றி தகவல் அறிந்த போலீசார், அங்கு சென்று அவர்களை கைது செய்திருந்தனர். முன்விரோதத்தில் இந்த கொலை நடந்திருப்பதாகவும், சீனிவாஸ் கொலையில் மூளையாக செயல்பட்டவர்கள் தலைமறைவாக இருப்பதாகவும், அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com