பாணாவரம், மின்சாரம் தாக்கி விவசாயி பலி

பாணாவரம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார்.
பாணாவரம், மின்சாரம் தாக்கி விவசாயி பலி
Published on

காவேரிப்பாக்கம்

பாணாவரம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரத்தை அடுத்த பள்ளகுன்னத்தூர் ரோட்டு தெருவை சேர்ந்த பெருமாள் (வயது 45), விவசாயி,

இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். நேற்று மாலை வேலை முடிந்து வீட்டிற்கு வந்தார்.

அப்போது இவரது வீட்டில் மின்சாரம் இல்லை. இதனால் வீட்டின் அருகிலுள்ள மின்சார டிரான்ஸ்பார்மர் மீது பெருமாள் ஏறி சரி செய்ய முயன்றார். அப்போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் பாணாவரம் போலீஸ் நிலையத்திலும், மின்னல் மின்சார அலுவலகத்திலும் தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com