

பொள்ளாச்சி
வங்கிகள் தனியார்மயமாக்கப்படுவதை கண்டித்து அகில இந்திய அளவில் வருகிற 15, 16-ந் தேதிகளில் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்த நிலையில் அதே கோரிக்கையை வலியுறுத்தி பொள்ளாச்சி காந்தி சிலை பாரத ஸ்டேட் வங்கி முன்பு ஊழியர்கள் சங்கத்தினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு கிளை தலைவர் சீதாராமன் தலைமை தாங்கினார். செயலாளர் ஜெயபிரகாஷ் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. இதில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் பாலசுப்பிரமணியம் நன்றி கூறினார்.