திருமணம் நடைபெறாததால் இளம்பெண் தற்கொலை

புதுவை கருவடிக்குப்பம் திருமணம் நடைபெறாததால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார்.
திருமணம் நடைபெறாததால் இளம்பெண் தற்கொலை
Published on

புதுச்சேரி,

புதுவை கருவடிக்குப்பம் இடையஞ்சாவடி ரோட்டை சேர்ந்தவர் பச்சையப்பன். ஜிப்மர் ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் சுமிதா (வயது 26). இவருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தன. இதனிடையே அவரை பெண் பார்த்து சென்றவர்கள் திருப்திகரமான பதில் எதுவும் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சுமிதா விஷம் குடித்து வீட்டில் மயங்கிக்கிடந்தார். இதை பார்த்த அவரது குடும்பத்தினர் சுமிதாவை மீட்டு சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

திருமணம் கைகூடாத ஏக்கத்தில் அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின்பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com