நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்து வருவதால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.
நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
Published on

பவானிசாகர்

பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்து வருவதால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.

பவானிசாகர் அணை

தென்னிந்தியாவின் மிகப் பெரிய மண் அணை மற்றும் தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற பெருமை கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி என கணக்கிடப்படுகிறது.

நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மோயாறும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது. பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை.

நீர்வரத்து குறைந்தது

தற்போது பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் மழை குறைந்தது. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து குறைந்துள்ளது. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 618 கனஅடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 104.74 அடியாக இருந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 600 கன அடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கடந்த 2 நாட்களுக்கு முன் முழு கொள்ளளவான 105 அடியை எட்டும் நிலையில் இருந்தது. ஆனால் கடந்த 2 நாட்களாக பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு சராசரியாக குறைந்து வருவதால் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com