நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லை: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து குறைந்தது.
நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லை: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
Published on

பவானிசாகர்

நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து குறைந்தது.

பவானிசாகர் அணை

தென்னிந்தியாவின் மிகப் பெரிய மண் அணை என்ற பெருமையும், தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி என கணக்கிடப்படுகிறது. .நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியிலிருந்து வரும் மோயாறும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது. பவானிசாகர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை.

நீர்வரத்து குறைந்தது

தற்போது பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் மழை குறைந்து விட்டது. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து குறைந்துள்ளது.

நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 6,312 கன அடி தண்ணீர் வந்தது.

நேற்று மாலை 4 மணியளவில் அது வினாடிக்கு 2,529 கனஅடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டம் 104.50 அடியாக நீடிக்கிறது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 1,500 கனஅடியும், பவானி ஆற்றில் வினாடிக்கு 500 கன அடி உபரி நீரும் திறக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com