மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மாட்டுங்காவில் பா.ஜனதாவினர் போராட்டம்

மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மாட்டுங்காவில் பா.ஜனதாவினர் போராட்டம் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.
மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மாட்டுங்காவில் பா.ஜனதாவினர் போராட்டம்
Published on

மும்பை,

சயான் கோலிவாடா பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக மாநகராட்சியினர் மக்கள் பிரச்சினைகளை தீர்க்கவில்லை என குற்றம்சாட்டி நேற்று மாட்டுங்காவில் உள்ள மாநகராட்சி வார்டு அலுவலகம் முன் பா.ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மும்பை பா.ஜனதா துணை தலைவா கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது. மும்பை தலைவர் மங்கல் பிரதாப் லோதா முன்னிலை வகித்தார். போராட்டத்தில் கலந்து கொண்ட 500-க்கும் மேற்பட்ட கட்சியினர், பொது மக்கள் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, சயான் கோலிவாடா பகுதியில் குடிநீர் பிரச்சினை, சாக்கடை கழிவுநீர், குப்பைகளை முறையாக அகற்றாதது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை மக்கள் சந்தித்து வருகின்றனர். இதை தீர்க்க மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றனர்.

இந்தநிலையில் போராட்டம் குறித்து அறிந்து மாநகராட்சி துணை கமிஷனர் மாட்டுங்கா அலுவலகத்துக்கு வந்தார். அங்கு கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. கோரிக்கை மனுவை அவரிடம் வழங்கினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com