வீட்டு பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

வீட்டு பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது
வீட்டு பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
Published on

ராமநாதபுரம்

ராமநாதபுரம் ஆதம்நகர் பகுதியை சேர்ந்தவர் மாரி (வயது 58). இவர் நேற்று முன்தினம் தனது குடும்பத்தினருடன் கோவில் விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்றுவிட்டார். இந்நிலையில் இவரின் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 1 பவுன் தங்க தோடு மற்றும் ரூ.18 ஆயிரம் ஆகியவற்றை திருடிச் சென்றுவிட்டனர். விழாவிற்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்த மாரி வீட்டில் திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com