மதுரவாயலில் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு

மதுரவாயல் ருக்மணி நகரில் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு.
மதுரவாயலில் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு
Published on

பூந்தமல்லி,

மதுரவாயல் ருக்மணி நகர் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 38). இவருடைய மனைவி நாகமணி (34). நேற்று முன்தினம் மதியம் நாகமணி, வீட்டை பூட்டி விட்டு விருகம்பாக்கம், சாலிகிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் இரவில் வீட்டுக்கு திரும்பி வந்தார்.அப்போது வீட்டின் முன்பக்க கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் நகையை மர்மநபர்கள் திருடிச்சென்று இருப்பது தெரிந்தது.

இது குறித்த புகாரின் பேரில் மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com