கடன் தொல்லையால் விஷம் குடித்து கொத்தனார் தற்கொலை

போடியில் கடன் தொல்லையால் விரக்தியடைந்த கொத்தனார் விஷம் குடித்து தற்காலை செய்து கொண்டார்.
கடன் தொல்லையால் விஷம் குடித்து கொத்தனார் தற்கொலை
Published on

போடி:

போடி பொன்னையா மேஸ்திரி சந்து பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 30). கொத்தனார். இவருக்கு சுதா என்ற மனைவியும் விஷ்ணு என்ற மகனும் உள்ளனர்.

இளங்கோவன் தனது குடும்ப தேவைக்காக பலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த கடனை திரும்ப கொடுக்க முடியாமல் அவர் அவதியடைந்து வந்தார். கடன் கொடுத்தவர்களும், இளங்கோவனிடம் கடனை திருப்பி தருமாறு அழுத்தம் கொடுத்தனர்.

இதனால் விரக்தியடைந்த அவர் நேற்று முன்தினம் விஷத்தை குடித்தார். இதில் மயங்கி விழுந்த அவரை, சுதாவும், விஷ்ணுவும் மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், இளங்கோவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த தற்கொலை குறித்து போடி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com