தீக்குளித்த பெண் சாவு

தீக்குளித்த பெண் பலியானார்.
தீக்குளித்த பெண் சாவு
Published on

பள்ளிபாளையம்:

வெப்படை அருகே உள்ள அல்லிநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் கார்மேகம். இவருடைய மனைவி ஜெயலட்சுமி (வயது 45). இவருக்கும், கார்மேகத்துக்கும் இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த மாதம் 28-ந் தேதி ஜெயலட்சுமி வீட்டில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஜெயலட்சுமி நேற்று பலியானார். இந்த சம்பவம் குறித்து வெப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com