கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது

கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது
கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது
Published on

ஆற்காடு

ஆற்காடு தாலுகா போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த ஆற்காடு தோப்புகானா பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்ற ஆனந்தராஜ் (வயது 30) என்பவரை இன்ஸ்பெக்டர் காண்டீபன் தலைமையில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவரின் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

அதன்பேரில் ஆனந்தராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com