கார் மோதி படுகாயம் அடைந்த பள்ளி மாணவன் சாவு

தோகைமலை அருகே கார் மோதி படுகாயம் அடைந்த பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான். இது தொடர்பாக கார் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார் மோதி படுகாயம் அடைந்த பள்ளி மாணவன் சாவு
Published on

தோகைமலை

கார் மோதல்

கரூர் மாவட்டம், தோகைமலை போலீஸ் நிலையத்திற்குட்டி பொருந்தலூர் ஊராட்சி சின்னரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் ஜோதிவேல். இவரது மகன் தரணிஸ் (வயது 8). இவன் அதே ஊரில் உள்ள அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான். இந்தநிலையில் கடந்த 4-ந்தேதி மாலையில் ஜோதிவேலும், தரணிஸ்சும் சின்னரெட்டிபட்டி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது, மணப்பாறை-குளித்தலை மெயின் ரோட்டில் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி குளித்தலை அருகே உள்ள அய்யர்மலையை சேர்ந்த மாதவன் (வயது 32). என்பவர் ஓட்டி வந்த கார் தரணிஸ் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தரணிஸ் படுகாயம் அடைந்தான்.

சாவு-கைது

இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த தரணிஸ்சை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தான்.

இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு தரணிஸ் பரிதாபமாக இறந்தான். இந்த விபத்து குறித்து ஜோதிவேல் கொடுத்த புகாரின்பேரில், தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து கார் டிரைவர் மாதவன் மீது வழக்குப்பதிந்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com