மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல் மோதியது.
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்
Published on

வேலாயுதம்பாளையம்

வேலாயுதம்பாளையம் அருகே உள்ள புன்செய்புகளூர் பகுதியை சேர்ந்தவர் பூவழகன் (வயது 51). இவரது மகன் சுரேந்தர் (33). இவர்கள் 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே கரூரில் இருந்து நாமக்கல் மாவட்டம் பெரிபட்டியை சேர்ந்த செந்தில் (50) என்பவர் ஓட்டி வந்த கார் ஒன்று பூவழகன், சுரேந்தர் ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிள் மீதும், சாலையோரம் நின்றிருந்த முகமது ரகுமான் (42) என்பவர் மீதும் மோதியது. இதையடுத்து படுகாயமடைந்த 3 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சு மூலம் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com