போக்சோ சட்டத்தில் கார் டிரைவர் கைது

போக்சோ சட்டத்தில் கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
போக்சோ சட்டத்தில் கார் டிரைவர் கைது
Published on

பழனி:

பழனியை அடுத்த பாலசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் ஹரிகரசுதன் (வயது 21). கார் டிரைவர்.

இவர், 16 வயதுடைய சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி, பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறினாள்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் பழனி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.

அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து ஹரிகரசுதனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com