

வடகாடு, ஜூலை.8-
வடகாடு தெற்குப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராசாத்தி (வயது 30). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன் (51) என்பவருக்கும் குடிதண்ணீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டு மோதலாகியது. இதில் சீனிவாசன் கம்பு, கைகாளால் தாக்கியதில் ராசாத்தி காயம் அடைந்தார். இது குறித்து ராசாத்தி கொடுத்த புகாரின் பேரில் சீனிவாசன் மீது வடகாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.