தொழிற்சங்கத்தினர் 400 பேர் மீது வழக்குப்பதிவு

தொழிற்சங்கத்தினர் 400 பேர் மீது வழக்குப்பதிவு
தொழிற்சங்கத்தினர் 400 பேர் மீது வழக்குப்பதிவு
Published on

திருச்சி, மார்ச்.31-
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கலை கண்டித்தும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய தொழிற்சங்கங்கள் கடந்த 2 நாட்கள் வேலை நிறுத்தம் அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 2-வது நாளாக, அதாவது நேற்று முன்தினம் திருச்சி பாரதிதாசன் சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். பொதுமக்களுக்கு இடையூறாக கூட்டம் கூடி போராட்டம் நடத்தியதாகவும், கொரோனா விதிகளை கடைபிடிக்காத காரணத்தினாலும், பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகளான ஜோசப் நெல்சன், ரெங்கராஜன், ஜோன்ஸ், சுரேஷ், வெங்கட் நாராயணன், சுந்தரராஜன் உள்ளிட்ட 400 பேர் மீது கண்டோன்மெண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com