கருங்கல்பாளையம் சந்தைக்கு 600 மாடுகள் விற்பனைக்கு வந்தன

கருங்கல்பாளையம் சந்தைக்கு 600 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.
கருங்கல்பாளையம் சந்தைக்கு 600 மாடுகள் விற்பனைக்கு வந்தன
Published on

ஈரோடு

கருங்கல்பாளையம் சந்தைக்கு 600 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.

மாட்டு சந்தை

ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் வாரந்தோறும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மாட்டு சந்தை கூடி வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் கூடிய சந்தைக்கு 100 கன்று குட்டிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதில் கன்றுகுட்டி ஒன்று ரூ.5 ஆயிரம் முதல் ரூ.14 ஆயிரம் வரை விற்பனையானது.

இந்த நிலையில் நேற்று வழக்கமான சந்தை கூடியது. இந்த சந்தைக்கு ஈரோடு, கரூர், நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல், சேலம், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

600 மாடுகள்

400 பசு மாடுகளும், 200 எருமை மாடுகளும் என மொத்தம் 600 மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் எருமை மாடு ஒன்று ரூ.23 ஆயிரம் முதல் ரூ.48 ஆயிரம் வரையும், பசு மாடு ஒன்று ரூ.31 ஆயிரம் முதல் ரூ.62 ஆயிரம் வரையும் விற்பனை ஆனது. ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகளும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகளும் வந்து, விவசாயிகளிடம் நேரடியாக விலைபேசி மாடுகளை பிடித்து வாகனங்களில் ஏற்றி சென்றனர். இதனால் நேற்று மாடுகள் விற்பனை மும்முரமாக நடந்தது. விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் வசதிக்காக ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் நடமாடும் ஏ.டி.எம். மையம் சந்தையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதை பலர் பயன்படுத்திக் கொண்டனர். நேற்று 90 சதவீதம் மாடுகள் விற்பனை ஆனதாக சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com