குயில்தோப்பு விவகாரம் குறித்து சி.பி.சி.ஐ.டி. வழக்குப்பதிவு: மகளிர் ஆணைய தலைவியை பதவிநீக்கம் செய்ய வேண்டும் - பா.ஜ.க. வலியுறுத்தல்

குயில்தோப்பு விவகாரம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ள மகளிர் ஆணைய தலைவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்தி உள்ளது.
குயில்தோப்பு விவகாரம் குறித்து சி.பி.சி.ஐ.டி. வழக்குப்பதிவு: மகளிர் ஆணைய தலைவியை பதவிநீக்கம் செய்ய வேண்டும் - பா.ஜ.க. வலியுறுத்தல்
Published on

புதுச்சேரி,

பா.ஜ.க. மாநில செயலாளர் சாமிநாதன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவை கருவடிக்குப்பத்தில் பாரதியார் கவிதை எழுதிய குயில்தோப்பு பகுதியை போலி பத்திரம் தயாரித்து விற்பனை செய்தது தொடர்பாக புதுவை மகளிர் ஆணைய தலைவி ராணி உள்பட 11 பேர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் பின்னணியில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய புள்ளிகள் பலர் உள்ளனர்.

பாரதியார் கவிதை எழுதிய குயில் தோப்பிற்கே பாதுகாப்பு இல்லாத நிலையில், வெளிநாடுகளில் வாழும் புதுவையை சேர்ந்த குடிமக்களுடைய சொத்துகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

இது குறித்து கவர்னர் உடனடியாக நடவடிக்கை எடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள மகளிர் ஆணைய தலைவி ராணியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

புதுவையில் உள்ள பல அரசு மதுக்கடைகள் மற்றும் பெட்ரோல் பங்க்குகள் ஏலம் விடப்படாமல் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் அபகரிக்க நினைக்கின்றனர். இதனை புதுவை மாநில மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

புதுவையில் தடை செய்யப்பட்ட லாட்டரிகள் விற்பனை நடைபெற்று வருகிறது. இதன் மீது உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ.க. கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்படுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com