மாவட்ட அளவிலான செஸ் போட்டி

அருப்புக்கோட்டை மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது.
மாவட்ட அளவிலான செஸ் போட்டி
Published on

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டையில் செஸ் சூப்பர் கிங்ஸ் செஸ் அகாடமி நடத்திய 7,10,13 மற்றும் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவுகளில் மாவட்ட அளவிலான முதலாம் ஆண்டு சிறப்பு செஸ் போட்டிகள் நடைபெற்றது. இதில் 7 மற்றும் 17-வது பிரிவுகளில் வெற்றி பெற்றவர்கள் மாநில அளவிலான செஸ் போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இந்த செஸ் போட்டிகளில் அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர், காரியாபட்டி உள்ளிட்ட விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பள்ளிகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு போக்குவரத்து போலீஸ் பிரிவு இன்ஸ்பெக்டர் சுடலைமணி, பள்ளி தாளாளர் செல்லப்பாண்டி, சி.எஸ்.ஐ. பெண்கள் மேல்நிலைப்பள்ளி தாளாளர் நெல்சன் துரைராஜ், ஆடிட்டர் கிருபா ராஜ்குமார், நகர்மன்ற உறுப்பினர் டுவிங்கிளின் ஞானபிரபா ஆகியோர் பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கினர். போட்டிக்கான ஏற்பாடுகளை செஸ் சூப்பர் கிங்ஸ் அகாடமியை சேர்ந்த சாமுவேல் செய்திருந்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com