கோத்தகிரி மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக வந்த கோழிக்குஞ்சு வடிவிலான தக்காளி

கோத்தகிரி மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கோழிக்குஞ்சு வடிவிலான தக்காளி வந்தது.
கோத்தகிரி மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக வந்த கோழிக்குஞ்சு வடிவிலான தக்காளி
Published on

கோத்தகிரி

கோத்தகிரி மார்க்கெட்டிற்கு உள்ளூர் மற்றும் சமவெளி பகுதியில் இருந்து ஏராளமான காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இந்த நிலையில் மைசூருவில் இருந்து கொண்டு வரப்பட்ட தக்காளி, வித்தியாசமான வடிவில் இருந்தது.

அந்த தக்காளியை திடீரென்று பார்க்கும்போது கோழிக்குஞ்சு வடிவில் இருந்தது. இந்த தக்காளி அங்கு வந்த பொதுமக்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இதையடுத்து கடைக்காரர் அந்த தக்காளியை எடுத்து தனியாக பொதுமக்களின் பார்வைக்காக வைத்தார். அதை அங்கு வந்த பொதுமக்கள் அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com