குழியில் தேங்கிய மழைநீரில் மூழ்கி 2 வயது குழந்தை பலி

குழியில் தேங்கிய மழைநீரில் மூழ்கி 2 வயது குழந்தை பலி
குழியில் தேங்கிய மழைநீரில் மூழ்கி 2 வயது குழந்தை பலி
Published on

முசிறி, நவ.24-
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உமையாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார். இவரது மனைவி கனகவள்ளி. இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களது மகன் ஜீவன் (வயது 2).
சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டதால் குழந்தையை தினேஷ்குமாரின் தாயார் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் அவர் வீட்டிற்குள் சமையல் வேலை செய்து கொண்டிருந்த போது, வீட்டு அருகே ஜீவன் விளையாடி கொண்டு இருந்தான். அப்போது, வீட்டு அருகே ஒரு குழியில் மழைநீர் தேங்கி நின்றிருந்தது. இதில் தவறி ஜீவன் விழுந்தான். இதை யாரும் கவனிக்காததால் அவன் மழைநீரில் மூழ்கி மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தான்.
இந்தநிலையில் தினேஷ்குமாரின் தாயார் குழந்தையை காணாது தேடியபோது, குழியில் தேங்கிய மழைநீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. பேரனின் உடலை பார்த்து அவர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து முசிறி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாலிக் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com