வாகனம் மோதி வாலிபர் சாவு

பாளையங்கோட்டை அருகே வாகனம் மோதி வாலிபர் இறந்தார்.
வாகனம் மோதி வாலிபர் சாவு
Published on

நெல்லை, ஏப்:

பாளையங்கோட்டை அருகே கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகன் மாரி வசந்த் (வயது 21). இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் பாளையங்கோட்டை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் திடீரென்று மாரி வசந்தின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயமடைந்த அவரை பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாரி வசந்த் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com