கோவையில்: ரூ.3.18 கோடிக்கு தேயிலை தூள் ஏலம்

கோவை ஏல மையத்தில் ரூ.3.18 கோடிக்கு தேயிலை தூள் ஏலம் போனது.
கோவையில்: ரூ.3.18 கோடிக்கு தேயிலை தூள் ஏலம்
Published on

கோவை,

கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தேயிலை வர்த்தக மையத்தில் வாரந்தோறும் மின்னணு முறையில் தேயிலை ஏலம் விடப்படுகிறது. இதில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு ஏலதாரர்கள் கலந்து கொண்டு ஆன்லைன் மூலம் தங்களுக்கு தேவையான தேயிலையை ஏலம் எடுத்து வருகிறார்கள். இதன்படி நடைபெற்ற 48-வது ஏல விவரம் வருமாறு:-

இந்த ஏலத்துக்கு 3 லட்சத்து 6 ஆயிரத்து 285 கிலோ தேயிலைத்தூள் வந்தது. இதில் 2 லட்சத்து 73 ஆயிரத்து 469 கிலோ தேயிலைத்தூள் ஏலம் போனது. இது 89 சதவீதம் ஆகும். 42 ஏலதாரர்கள் கலந்து கொண்டனர்.

ஒரு கிலோ தேயிலைத்தூள் 116 ரூபாய் 60 காசுக்கு ஏலம் போனது. ஆனால் கடந்த வாரம் ஒரு கிலோ 113 ரூபாய் 16 காசுக்கு ஏலம் போனது. இதன் மூலம் கிலோவுக்கு ரூ.3.44 விலை அதிகரித்தது. மொத்தம் ரூ.3 கோடியே 18 லட்சத்து 86 ஆயிரத்து 485-க்கு தேயிலைத்தூள் ஏலம் போனது.

இதே போல் இலை ரக தேயிலை ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 813 கிலோ ஏலத்துக்கு வந்தது. அதில் 1 லட்சத்து 2 ஆயிரத்து 322 கிலோ ஏலம் போனது. இது 91 சதவீதம் ஆகும். இதில் 33 ஏலதாரர்கள் கலந்து கொண்ட னர். ஒரு கிலோ இலை ரக தேயிலையின் விலை 110 ரூபாய் 4 காசு ஆகும். இது கடந்த வாரம் ரூ.109.33 காசு ஆக இருந்தது. இதனால் இந்த வாரம் கிலோவுக்கு 71 காசு விலை அதிகரித் தது. இந்த வாரம் ரூ.1 கோடியே 12 லட்சத்து 59 ஆயிரத்து 512-க்கு இலை ரக தேயிலை ஏலம் போனது.

இந்த ஏலத்தில் மொத்தம் 3 லட்சத்து 75 ஆயிரத்து 791 கிலோ தேயிலைத்தூள் மற்றும் இலைரக தேயிலை ஏலம் போனது. இதன் மொத்த மதிப்பு ரூ.4 கோடியே 31 லட்சத்து 45 ஆயிரத்து 997 ஆகும். மேற்கண்ட தகவலை கோவை தேயிலை ஏல மையம் வெளியிட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com