கல்லூரி பேராசிரியர்கள் போராட்டம்

பாளையங்கோட்டையில் கல்லூரி பேராசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்லூரி பேராசிரியர்கள் போராட்டம்
Published on

நெல்லை:

பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி முன்பு நேற்று மாலை பேராசிரியர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். கல்லூரி ஆசிரியர் சங்க தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பொது செயலாளர் நாகராஜன் மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் மோகன், பார்த்தசாரதி, மகாராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பேராசிரியர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கை எடுத்து வருவதை கண்டித்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் கல்லூரி கல்வி அதிகாரிகள், பேராசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com